Monday, 7 January 2013

வரதட்சணை கொடுமையும் இஸ்லாம் வழங்கும் தீர்வும்


வரதட்சணை கொடுமையும் இஸ்லாம் வழங்கும் தீர்வும்

மாதாந்திர பெண்களுக்கான இஸ்லாமிய விழிப்புணர்வு கருத்தரங்கம் -ஏப்ரல் 2012


அல் இஸ்லாஹ் வழிகாட்டுதல் மையம் (தமுமுக) சார்பாக 23.04.2012 மாலை 6.30 மணிக்கு மாதாந்திர பெண்களுக்கான இஸ்லாமிய விழிப்புணர்வு கருத்தரங்கம் (ஏப்ரல் 2012 ) நடைபெற்றது. அல் இஸ்லாஹ் வழிகாட்டுதல் மைய சகோதரர் கௌஸ் பாஷா அவர்கள் கிராத் ஓதிய பின் வரவேற்று பேசினார்.

 கோடைக்கால  மருத்துவ குறிப்புகள்
கோடைக்கால  மருத்துவ குறிப்புகள் என்ற தலைப்பில் சகோதரி டாக்டர் . ஆர். வஹிதா ரஹ்மான் M.D. (N.S. மருத்துவமனை, தாம்பரம் ) அவர்கள் உரையாற்றினார்கள் . இதில் ஏராளமான மருத்துவ குறிப்புகளை வழங்கினார். பெண்களுக்கு மிக பயனுள்ளதாக இருந்தது.

வரதட்சணை கொடுமையும்
 இஸ்லாம் வழங்கும் தீர்வும்

வரதட்சணை கொடுமையும் இஸ்லாம் வழங்கும் தீர்வும் என்ற தலைப்பில் சகோதரி. A . மெஹ்ராஜ் பாத்திமா ஆலிமா அவர்கள் சிறப்பான உரையாற்றினார்கள். நிகழ்கால சம்பவங்களை எடுத்து கூறி அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி (ஸல் ) அவர்களின் வழிகாட்டுதல்களை எடுத்து கூறினார்.    

இக்கூட்டத்தில் 200 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டார்கள்.

தாம்பரத்தில் பெண்களுக்கான இஸ்லாமிய கருத்தரங்கம்


தாம்பரத்தில் பெண்களுக்கான இஸ்லாமிய கருத்தரங்கம்

அல் இஸ்லாஹ் வழிகாட்டுதல் மையம் சார்பாக,  தாம்பரத்தில் பெண்களுக்கான இஸ்லாமிய கருத்தரங்கம் " ஈமானை வலுப்படுத்துவோம் " என்ற தலைப்பில் 08.02.2012  அன்று நடைபெற்றது. ஆலிம் . அப்துல் மஜீத் மஹ்ளரி அவர்களும் , ஆலிமா. ஜைனப் காதர் அவர்களும் கருத்துரை ஆற்றினார்கள் . 
 மௌலவி . அப்துல் மஜீத் மஹ்ளரி அவர்கள் உரையாற்றினார்கள் 


கருத்தரங்கில் கலந்து கொண்ட பெண்கள்